169 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட டெல்லி மெட்ரோ சேவைகள்.!
டெல்லி மெட்ரோ சேவைகள் 169 நாட்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மெட்ரோ சேவைகள் முடக்கப்பட்டிருந்தது. தற்போது விதிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக இன்று முதல் மெட்ரோ சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே ரயில்களில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கட்டுப்பாட்டு மையங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மூடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் ஆரோக்யா சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் பயணிகள் ரயில் நிலையங்களில் வெப்ப சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று முதல் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, டெல்லி, நொய்டா, சென்னை, கொச்சி, பெங்களூர், மும்பை லைன்-1, ஜெய்ப்பூர், ஹைதராபாத் மகா மெட்ரோ(நாக்பூர்), கொல்கத்தா, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் மெட்ரோ அதிகாரிகள் ரயில் இயக்குவதற்கான நடைமுறைகளை தயாரித்துள்ளனர். மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த மாதம் மெட்ரோ சேவைகள் தொடங்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் டெல்லி மெட்ரோ மஞ்சள் கோட்டில் இருந்து டெல்லியின் சமாய்ப்பூர் பட்லியில் இருந்து தேசிய தலைநகரை ஒட்டியுள்ள ஹரியானாவின் குருகிராமில் உள்ள ஹுடா நகர மையம் வரை இயக்கப்படும்.
மேலும் வழிக்காட்டுதல்களின் படி, பணி வர்த்தனைகள் மற்றும் டோக்கன்களை ஊக்கப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ரயில்களில் கூட்டம் வருவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு உதவுவதற்காக சுமார் 1,000 கூடுதல் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு பயணிகள் குறைவாக பேச அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, இன்று மீண்டும் டெல்லி மெட்ரோ சேவைகள் தொடங்குவதில் மகிழ்ச்சியளிக்கிறது. மெட்ரோ நல்ல ஏற்பாடுகளை செய்துள்ளது என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனக்குறைவாக இருக்க கூடாது எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
We are on our way. It’s been 169 days since we’ve seen you! Travel responsibly and commute if it’s only necessary. #MetroBackOnTrack pic.twitter.com/aCUnYO1ptS
— Delhi Metro Rail Corporation (@OfficialDMRC) September 7, 2020