டெல்லி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் இன்று மீண்டும் தொடங்க உள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் அமளி நிலவியதைத் தொடர்ந்து, மூன்று வாரங்களுக்கு பிறகு ஒத்திவைக்கப்பட்ட மாநகராட்சியின் (எம்சிடி) மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் இன்று தொடங்க உள்ளது. இது தவிர, 6 நிலைக்குழு(Standing Committee) உறுப்பினர்களுக்கான தேர்தலும் இன்று நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு எம்சிடி-இன் தலைமையகமான சிவிக் சென்டரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
லெப்டினன்ட் கவர்னர் (எல்ஜி) வி.கே.சக்சேனாவால் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பாஜக கவுன்சிலர் சத்யா சர்மா தலைமையில் நடைபெறும் இந்த சபையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு பதவிப்பிரமாணம் முடிந்த பின் மேயர் தேர்தல் தொடங்க இருக்கிறது. மேயர் பதவிக்கு, ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஷெல்லி ஓபராயும், பாஜக சார்பில் ரேகா குப்தாவும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
துணை மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆலே முகமது இக்பாலும், பாஜக சார்பில் ராம் நகர் கவுன்சிலர் கமல் பக்ரியும் போட்டியிடுகின்றனர். நிலைக்குழுவின் ஆறு பதவிகளுக்கு, ஆம் ஆத்மி கட்சியில் அமில் மாலிக், ரமிந்தர் கவுர், மோகினி ஜீன்வால், சரிகா சவுத்ரி ஆகியோரும், பாஜக சார்பில் கமல்ஜீத் செஹ்ராவத், கஜேந்திர தரால், பங்கஜ் லுத்ரா ஆகிய 7 பெரும் போட்டியிடுகின்றனர்.
டெல்லியின் 7 லோக்சபா எம்.பி.க்கள், மூன்று ராஜ்யசபா எம்.பி.க்கள் மற்றும் டெல்லி சட்டமன்ற சபாநாயகரின் ஒப்புதலின் பேரில் நியமனம் செய்யப்பட்டவர்களில் 14 எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் இந்த தேர்தலின் வாக்கெடுப்பில் பங்கேற்கின்றனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…