டெல்லி எம்சிடி தேர்தல், கடும் அமளிக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கவுள்ளது.!

Default Image

டெல்லி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் இன்று மீண்டும் தொடங்க உள்ளது.

ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் அமளி நிலவியதைத் தொடர்ந்து, மூன்று வாரங்களுக்கு பிறகு ஒத்திவைக்கப்பட்ட மாநகராட்சியின் (எம்சிடி) மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் இன்று தொடங்க உள்ளது. இது தவிர, 6 நிலைக்குழு(Standing Committee)  உறுப்பினர்களுக்கான தேர்தலும் இன்று நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு எம்சிடி-இன் தலைமையகமான சிவிக் சென்டரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

security mcd el

 

லெப்டினன்ட் கவர்னர் (எல்ஜி) வி.கே.சக்சேனாவால் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பாஜக கவுன்சிலர் சத்யா சர்மா தலைமையில் நடைபெறும் இந்த சபையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு பதவிப்பிரமாணம் முடிந்த பின் மேயர் தேர்தல் தொடங்க இருக்கிறது. மேயர் பதவிக்கு, ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஷெல்லி ஓபராயும், பாஜக சார்பில் ரேகா குப்தாவும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

துணை மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆலே முகமது இக்பாலும், பாஜக சார்பில் ராம் நகர் கவுன்சிலர் கமல் பக்ரியும் போட்டியிடுகின்றனர். நிலைக்குழுவின் ஆறு பதவிகளுக்கு, ஆம் ஆத்மி கட்சியில் அமில் மாலிக், ரமிந்தர் கவுர், மோகினி ஜீன்வால், சரிகா சவுத்ரி ஆகியோரும், பாஜக சார்பில் கமல்ஜீத் செஹ்ராவத், கஜேந்திர தரால், பங்கஜ் லுத்ரா ஆகிய 7 பெரும் போட்டியிடுகின்றனர்.

Delhimcd el1

டெல்லியின் 7 லோக்சபா எம்.பி.க்கள், மூன்று ராஜ்யசபா எம்.பி.க்கள் மற்றும் டெல்லி சட்டமன்ற சபாநாயகரின் ஒப்புதலின் பேரில் நியமனம் செய்யப்பட்டவர்களில் 14 எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் இந்த தேர்தலின் வாக்கெடுப்பில் பங்கேற்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்