இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது டெல்லி மேயர் தேர்தல்..!
டெல்லியில் நடைபெற்ற மேயர் தேர்தல் 2வது முறையாக சலசலப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் அமளி நிலவியதைத் தொடர்ந்து, மூன்று வாரங்களுக்கு பிறகு ஒத்திவைக்கப்பட்ட மாநகராட்சியின் (எம்சிடி) மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் இன்று தொடங்கியது . இது தவிர, 6 நிலைக்குழு(Standing Committee) உறுப்பினர்களுக்கான தேர்தலும் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு எம்சிடி-இன் தலைமையகமான சிவிக் சென்டரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
லெப்டினன்ட் கவர்னர் (எல்ஜி) வி.கே.சக்சேனாவால் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பாஜக கவுன்சிலர் சத்யா சர்மா தலைமையில் நடைபெறும் இந்த சபையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கவுன்சிலர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் சவுரப் பரத்வாஜ் எம்சிடியை வலுக்கட்டாயமாக பாஜக கைப்பற்ற விரும்புகிறதா என்று கேட்டார்.
இதனால் சபையில் இருகட்சிகளுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மேயர் தேர்தலுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் வரை அவையை தலைமை அதிகாரி ஒத்திவைத்தார். தற்பொழுது இரண்டாவது முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
#WATCH | Delhi: A ruckus ensued at Civic Centre, MCD Headquarters soon after voting for Delhi Mayor began. The election is postponed as the House was adjourned sine die due to ruckus. pic.twitter.com/dTZty70RTi
— ANI (@ANI) January 24, 2023