பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் 500 அபராதம்.! இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு.!
டெல்லி முழுவதும் பொது இடங்களில் மாஸ்க் அணிய கட்டயாம். மீறினால், 500 ரூபாய் அபராதம்.
கொரோனா மற்றும் குரங்கு அம்மை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தற்போது ஆங்காங்கே அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.
இதனால் பல்வேறு இடங்களில் மீண்டும் மாஸ்க், சமூக இடைவெளி , கட்டுப்பாடுகள் என ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காலையில், உச்சநீதிமன்றத்தில் அனைவரும் கட்டயாம் மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவு வெளியாகி இருந்தது.
அதே போல், தற்போது டெல்லி முழுவதும் பொது இடங்களில் மாஸ்க் கட்டயாம் என உத்தரவு வெளியாகி உள்ளது. அதாவது, பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம் எனவும் உத்தரவு வெளியாகியுள்ளது.
இந்த அபராத உத்தரவு,நான்கு சக்கர வாகனத்தில் உள்ளே பயணிக்கும் நபர்களுக்கு பொருந்தாது எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.