ஆன்லைனில் ரிமோட் கண்ட்ரோல் காரை ஆர்டர் செய்தவருக்கு,”பார்லே-ஜி” பிஸ்கட் பாக்கெட் ஒன்று டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
டெல்லியின் பகவான் நகர் பகுதியில் வசிக்கும் விக்ரம் புராகோஹெய்ன் என்பவர்,கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குழந்தைகளுக்கு ரிமோட் கண்ட்ரோல் கார் ஒன்றை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் ஆர்டர் செய்திருந்தார்.
இந்நிலையில்,நேற்று டெலிவரி வந்த பார்சலின் அளவு மிகவும் சிறியதாக இருந்ததனால்,உடனே அந்த பார்சலை திறந்து பார்த்தார். அதில் அவர் ஆர்டர் செய்த ரிமோட் கண்ட்ரோல் காருக்குப் பதிலாக “பார்லே-ஜி” பிஸ்கட் பாக்கெட் ஒன்று இருப்பதைக் கண்டு விக்ரம் அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து,தயாரிப்பை தவறாக வழங்கியது குறித்து அமேசானின் அதிகாரப்பூர்வ தளத்தில் விக்ரம் புகார் அளித்தார்.பின்னர்,அமேசான் நிறுவனம் பணத்தைத் திருப்பி தர ஒப்புக்கொண்டதாகவும் , மேலும்,அதற்காக மன்னிப்பு கோரியதாகவும் விக்ரம் தெரிவித்தார்.
கடந்த மாத தொடக்கத்தில்,மகாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் இருந்து கோல்கேட் மவுத்வாஷை ஆர்டர் செய்தார், ஆனால் அதற்கு பதிலாக ரூ .13,000 மதிப்புள்ள ரெட்மி நோட் 10 பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…