டெல்லி: 6 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட கணவன், உயிருக்கு போராடும் மனைவி..!

டெல்லியில் வினய் தாஹியா என்பவரை 4 சுட்டு கொன்றுள்ளனர். மனைவி கிரண் தாஹியாவுக்கு 5 குண்டுகள் பாய்ந்த நிலையில் வெங்கடேஸ்வர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுடெல்லி துவாரகாவின் அம்பர்ஹாய் கிராமத்தில் வசிக்கும் தம்பதி வினய் தாஹியா(23)-கிரண் தாஹியா(19). இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். ஹரியானாவின் சோனிப்பேட்டை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த வருடம் குடும்பத்தினருக்கு எதிராக ஓடிவந்துள்ளனர். பின்னர் புதுடெல்லி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தாஹியா சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும், அவரது மனைவிக்கும் 5 குண்டுகள் பாய்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து இரவு 9 மணியளவில் துவாரகா செக்ட்டர்-23 காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கு விசாரணை குறித்து துவாரகா துணை போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் மீனா தெரிவித்துள்ளதாவது, வினய் தாஹியா மற்றும் அவரது மனைவி கிரண் தாஹியா இருவரையும் அவர்கள் வசிக்கும் வாடகை வீட்டில் 6 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டனர். வினய் தாஹியாவுக்கு 4 புல்லட் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், கிரண் தாஹியாவுக்கு 5 புல்லட் பாய்ந்துள்ளது. அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.