டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியா ஏற்கனவே சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே ஊழல் வழக்கில், தெலங்கானா முதல்வரும் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது.
மதுபான கொள்கை- சிபிஐ விசாரணை:
அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 12 அன்று ஹைதராபாத்தில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளான கே.கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் ஏழு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தியிருந்தனர். இதையடுத்து, பாரதிய ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) எம்எல்சி கவிதா, டெல்லி அமலாக்க இயக்குனரகம் தலைமையகத்தில் உள்ள புலனாய்வாளர்கள் முன் ஆஜராகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
அமலாக்கத்துறை சம்மன்:
கடந்த 9ம் தேதி ஆஜராகுமாறு 8ம் தேதி கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பப்பட்டது. இதன்பின், தன்னை தனது வீட்டில் வைத்து விசாரணை நடத்துமாறு கவிதா கோரிக்கை வைத்த நிலையில், இதை ஏற்க மறுத்த அமலாக்கத்துறை, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்தது. மதுபான கொள்கை வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராவதாக கவிதா தெரிவித்திருந்தார்.
மீண்டும் சம்மன்:
விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த 11-ஆம் தேதி கவிதா ஆஜரானார். டெல்லி அரசின் மதுவிலக்கு கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக தெலுங்கானா முதல்வர் மகள் கவிதாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். இந்த நிலையில், டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் கே.கவிதாவுக்கு அமலாக்கத்துறை மார்ச் 20 அன்று சம்மன் அனுப்பியுள்ளது.
2வது சுற்று விசாரணை:
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், பிஆர்எஸ் தலைவருமான கே.கவிதாவுக்கு மார்ச் 20ஆம் தேதி அமலாக்க இயக்குனரகம் (ED) புதிய சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த வியாழன் அன்று, இரண்டாவது சுற்று விசாரணை செய்யப்பட வேண்டியிருந்தது, அதை கே.கவிதா தவிர்த்துவிட்டார். இப்போது, மார்ச் 20 ஆம் தேதி விசாரணையில் சேருமாறு மற்றொரு சம்மன் அனுப்பப்பட்டது.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…