டெல்லி லஜ்பத் நகர் துணிக்கடை தீ விபத்து – அருகிலிருந்த 5 கடைகள் எரிந்து நாசம்!

- நேற்று காலை டெல்லி லஜ்பத் நகர் துணிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- இந்த தீ விபத்தால் அருகில் இருந்து ஐந்து கடைகள் எரிந்து நாசம் அடைந்து உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியுள்ளதால் பல மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதனை அடுத்து டெல்லியில் துணிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறப்பதற்கு கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று டெல்லியில் உள்ள லஜ்பத் நகர் கடைவீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மளமளவென பரவிய தீயால் அந்த கடையில் இருந்த துணிகள் அனைத்தும் எரிந்து நாசம் அடைந்ததோடு அருகிலிருந்த கடைகளுக்கும் தீ பரவ தொடங்கியது. இதனையடுத்து அப்பகுதி பெரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தண்ணீரை பீச்சி அடித்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை பரவ விடாமல் தடுத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் அருகில் இருந்த ஐந்து கடைகள் எரிந்து நாசமாகியுள்ளது. ஆனால் இவற்றின் மூலமாக யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025