டெல்லி : இந்து மகாபஞ்சாயத் நிகழ்ச்சியில் தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் …!
டெல்லியில் உள்ள இருவேறு பகுதிகளில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதாக இரண்டு எப்.ஐ.ஆர் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புராரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்து மகா பஞ்சாயத்தின் போது ஒரு பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டு உள்ளதாகவும், ஆன்லைன் பொருளில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பத்திரிக்கையாளர்கள் அடையாளம் தெரியாத நபர்கள் தங்களை துன்புறுத்தியதாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
எனவே, டெல்லி காவல்துறை ஆன்லைன் பணிபுரியும் பத்திரிகையாளர்களை தாக்கிய நபர்கள் மீது, பாலியல் துன்புறுத்தல், காயம் ஏற்படுத்துதல் மற்றும் பறிக்க முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேசமயம் டெல்லி இந்துமகா பஞ்சாயத்து நடைபெற்ற போது நேர்காணலில் செய்ய முயன்ற பத்திரிக்கையாளர்களை தாக்கியதாக மற்றொரு ஊடகவியலாளர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே அவர்கள் மீதும் 2வது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசியுள்ள இந்துமகா பஞ்சாயத்தில் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர் அர்பாப், பின்னால் நின்று கூட்டத்திலிருந்தவர்களை நேர்காணல் செய்ய முயற்சித்தோம். அப்போது சிலர் வந்து எங்களை துன்புறுத்தத் தொடங்கினார்கள்.
எங்களிடம் உள்ள பிரஸ் ஐடி மற்றும் ஆதார் கார்டுகளை கேட்டார்கள், அதன்பின் நாங்கள் ஜமியா நகரை சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும், ஜிகாதி என்று எங்களை அழைத்தார்கள். அதன் பின்பு மேடையில் நின்று எங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்கள், அங்கிருந்த மக்கள் எங்களை காப்பாற்றி தள்ளிக் கொண்டு சென்றனர்.
ஆனால், எங்களது மொபைல் போன்களை பறிமுதல் செய்து அதில் இருந்த வீடியோக்களை அழித்துவிட்டனர். எனது முதுகு மற்றும் கையில் காயம் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், காவல்துறை வருவதற்கு முன்பாக தங்களை தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.