டெல்லி ஜேஎன்யூ தாக்குதல் : திட்டமிட்ட பாசிச சர்ஜிக்கல் தாக்குதல்- மம்தா பானர்ஜி

- அதிகாரம் படைத்தவர்களின் பேச்சை மீறி போலீசாரால் என்ன செய்ய முடியும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுளளார்.
- மேலும் டெல்லி ஜேஎன்யூவில் நடந்தது திட்டமிட்ட பாசிச சர்ஜிக்கல் தாக்குதல் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . கடந்த மாதத்தில் விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர் .
நேற்று முன்தினம் பேராசிரியர்கள் சங்கம் சார்பாக பல்கலைக்கழகத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் .கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது முகமூடி கட்டிக் கொண்டு வந்த சிலர் கடுமையான ஆயுதங்களை வைத்துக் கொண்டு தாக்கினர்.இந்த தாக்குதலில் இடதுசாரி மாணவர் அமைப்பின் தலைவர் ஆய்ஷி கோஸ் கடுமையாக தாக்கப்பட்டு மண்டை உடைந்தது.இந்த தாக்குதலுக்கு ஆர்எஸ்எஸ் சார்பு ஏபிவிபி மாணவர் அமைப்பு இருப்பதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை குற்றம் சாட்டியது.அந்த முகமூடி அணிந்த கும்பல் வளாகத்திற்குள் இரவு 9 மணி வரை இருந்தனர்.அவர்கள் கையில் ஹாக்கி மட்டை ,இரும்பு கம்பி செங்கல்களை கொண்டு கண்ணில் படும் பொருட்கள் அடித்து விடுதியை சூறையாடினர்.இந்த தாக்குதலில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர் காயமைடந்த 28-க்கும் மேற்பட்டவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
இந்த தாக்குதலுக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கல்லூரி மாணவர்கள் டெல்லி காவல் தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். டெல்லி ஜே.என்.யு பல்கலை கழகத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பல இடங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் .
இந்நிலையில் இது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், டெல்லி மத்திய அரசின் கீழ் உள்ளது. ஒருபுறம் அவர்கள் பாஜக குண்டர்களை அனுப்பியுள்ளனர், மறுபுறம் அவர்கள் காவல்துறையை செயலற்றவர்களாக மாற்றியுள்ளனர். அதிகாரம் படைத்தவர்களின் பேச்சை மீறி போலீசாரால் என்ன செய்ய முடியும். இது ஒரு பாசிச சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்.மத்திய அரசுக்கு எதிராக பேசினால் பாகிஸ்தானியர் அல்லது நாட்டின் எதிரி என முத்திரை குத்துகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025