பயணிக்கு நலக்குறைவு: டெல்லி-ஜபல்பூர் விமானம் அவசரமாக தரையிறக்கம்!

இன்று காலை டெல்லியில் இருந்து ஜபல்பூர் நோக்கி புறப்பட்ட விமானம், ஒரு ஆண் பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அலையன்ஸ் ஏர் மூலம் இயக்கப்படும் விமானம் டெல்லி விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட பிறகு, விமானத்தில் 52 வயது பயணி ஒருவருக்கு நடுவானில் நோய்வாய்ப்பட்டது. மேலும், அவருக்கு இரத்த அழுத்தம் குறையத் தொடங்கியது.

இந்நிலையில், அந்த நபரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, காலை 9:40 மணியளவில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று ஜெய்ப்பூர் விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்