டெல்லி கலவரம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் இன்று விவாதம்…

டில்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜாப்ராபாத், மாவுஜ்பூர் பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கம், ஆதரிப்பவர்களுக்கும் இடையே, திடீரென மோதல் வெடித்தது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே இந்த மோதலும் ஏற்பட்டுள்ளது.
இந்த கலவரத்துக்கு மத்தியில் பலர் கைது செய்து சிறையிலடைத்தது. இந்நிலையில் டில்லி கலவரம் குறித்து இன்று ராஜ்யசபாவில் விவாதம் நடக்கிறது. நேற்று லோக்சபாவில் டில்லி கலரவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ”டில்லி கலவரத்தில் ஈடுபட்ட ஒருவர் கூட தப்ப முடியாது. அவர்கள், எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், ஜாதி, மத பாகுபாடின்றி, நடவடிக்கை பாயும்,” என தெரிவித்தார். இந்நிலையில் டில்லி கலவரம் தொடர்பாக இன்று ராஜ்யசபாவில் விவாதம் நடக்கிறது
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025