டெல்லியில் சட்ட விரோதமாக மது விற்பனை.! ஓட்டல் மேலாளர் கைது.!
வாடிக்கையாளர்களுக்கு சட்டவிரோதமாக மது விற்கப்பட்டது தொடர்பாக, டெல்லி தனியார் ஓட்டல் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் டெல்லியில் பல்வேறு கட்டுப்படடுகள் விதிக்கப்பட்டு, கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதில் முக்கியமாக, டெல்லி, ஓட்டல், பார்களில் மது வழங்க அனுமதி வழங்கப்படுவதில்லை.
இதனை மீறி, சட்ட விரோதமாக சில ஓட்டல்களில் மதுபானம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
இதனையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பவன் தஹியா தலைமையில் துவாரகாவின் 7வது பிரிவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சோதனை நடத்தபட்டது. அங்கு வாடிக்கையாளர்களுக்கு சட்டவிரோதமாக மது விற்கப்பட்டது கண்டறியப்பட்டு, அந்த ஓட்டலின் மேலாளர் கைது செய்யப்பட்டார். அவர்மீது, சட்ட விரோதமாக மது விற்றல், நோய் தொற்று பரப்புதல், பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.