டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து…! மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள்..!
டெல்லியில் மகப்பேறு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லியில், வைஷாலி காலனியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. அங்கிருந்து 20 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 20 பச்சிளம் குழந்தைகளும் வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.