அவதூறு வழக்கில் பிபிசிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன்!
பிரதமர் மோடி ஆவணப்படம் தொடர்பான அவதூறு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு சம்மன்.
பிரதமர் மோடி ஆவணப்படம் தொடர்பான அவதூறு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் இந்தியாவின் நற்பெயரையும், நீதித்துறையையும், பிரதமர் மோடியையும் அவதூறாகப் பேசுவதாகக் கூறி, அவதூறு வழக்கில் பிபிசிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆவணப்படத்தை வெளியிட்டு இந்திய நீதித்துறை, பிரதமர் மோடியை அவமானப்படுத்திவிட்டதாக கூறி பிபிசி செய்தி நிறுவனம் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, குஜராத்தைச் சேர்ந்த என்ஜிஓ ஜஸ்டிஸ் ஆன் ட்ரயல் மூலம் இந்த வழக்கு தாக்கலானது.
தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்த ஆவணப்படம் பிரதமர் மோடிக்கு எதிராக மறைமுகமாக காட்சியளிக்கிறது என்றார். இதன்பின், அவதூறு வழக்கில் பிபிசிக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.