Umar Khalid’s : டெல்லி கலவர வழக்கு உமர் காலித்தின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி கலவர வழக்கு தொடர்பாக உமர் காலித் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் ரஜ்னிஷ் பட்நாகர்ட் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் காலித்தின் ஜாமீன் மனுவில் எந்த தகுதியும் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்துள்ளது.
டிசம்பர் 2019 மற்றும் பிப்ரவரி 2020 இல் டெல்லியின் ஜாமியா பகுதியிலும் வடகிழக்கு டெல்லியிலும் நடந்த போராட்டங்கள் மற்றும் கலவரங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக காலித், ஷர்ஜீல் இமாம் மற்றும் பலர் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உமர் காலித் செப்டம்பர் 13, 2020 அன்று கைது செய்யப்பட்டார், மேலும் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொண்டதாக கூறி UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.