Delhi CM Arvind Kejriwal [File Image]
Arvind Kejriwal : அரவிந்த் கெஜிரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என என்ற மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்ர்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கடந்த வாரம் கைது செய்து விசரணை காவலில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இன்று அவரது நீதிமன்ற காவல் நீட்டிப்பு தொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டாலும், இன்னும் டெல்லி முதல்வராக அவர் தொடர்ந்து செயல்பட்டு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட காரணத்தால் அவர் டெல்லி முதல்வர் பொறுப்பில் நீடிக்க கூடாது. அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு, அரவிந்த் கெஜ்ரிவால் மீது தண்டனை எதுவும் உறுதியாகவில்லை. அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் நீதிமன்றத்தில் இல்லை. அதற்கான அதிகாரம் டெல்லி லெப்டினன்ட் கவர்னரிடமும், குடியரசு தலைவரிடம் மட்டுமேஉள்ளது.
டெல்லி மாநில ஆளுநர் , மாநிலத்தில் நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு அவர் தான் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். குடியரசு தலைவர் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, இதற்கு நீதிமன்றத்தில் அதிகாரம் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…
ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…
தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…
சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…