ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டெல்லியில் சற்று குறைந்த பாதிப்பு.
இந்திய தலைநகரமான டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வந்தது, இந்நிலையில் அங்கு கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முழு ஊரடங்கை அமல்படுத்தினார், இதன் விளைவாக கடந்த சில நாட்களாக டெல்லியில் தொற்று எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது. டெல்லியில் தினமும் சுமார் 80,000 கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
மேலும் இதைப்பற்றி டெல்லி சுகாதார அமைச்சர் சத்யெந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமை அன்று கூறுகையில் தேசிய தலைநகரில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36% லிருந்து 19.1% ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு நாளைக்கு 28,000 பேர் பாதிப்பு அடைந்த நிலையில் அது தற்போது 12,500 வரை குறைந்துள்ளது, தொற்று பாதிப்பு விகிதத்தை 5% க்கும் குறைவாகவும், 3000-4000 வழக்குகளுக்குக் கீழே வரும் வரை நாம் நிம்மதியாக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.இந்த தொற்று குறைய ஊரடங்கில் மக்கள் வெளியே வரமால் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…