கொரோனா நிவாரண பணிகள்.! 6 லட்சம் பேருக்கு மதியம் மற்றும் இரவு உணவளித்து வரும் டெல்லி அரசு.!
கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைப்பு சாரா நிறுவனங்களில் வேலைபார்த்த தினக்கூலி தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில், சுமார் 6 லட்சம் பேருக்கு மதியம் மற்றும் இரவு உணவு அளித்து வருகிறது டெல்லி அரசு. 5,85,386 பேருக்கு மதிய உணவும், 5,79,162 பேருக்கு இரவு உணவும் வழங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனை 1,423 சென்டர்களில் இருந்து டெல்லி அரசு வழங்கியுள்ளது.
இது குறித்து நேற்று பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘ நாங்கள் நேற்று (புதன் ) 3.5 – 4 லட்சம் பேருக்கு உணவளித்துள்ளோம். அடுத்து 10- 12 லட்சம் பேருக்கு உணவளிப்போம். மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் உணவு வழங்கும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளோம்.’ எனவும் தெரிவித்தார்.