காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையாக டெல்லி அரசு, வரும் 15 ஆம் தேதி முதல் அனைத்து வகையான டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தளவில், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகளவில் காணப்படுகிறது. இது, டெல்லியில் ஆண்டு முழுவதும் ஏற்படும் பிரச்சினையாகும். இந்த காற்று மாசு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் பல வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
டெல்லியில் காற்று மாசு காரணமாக நடப்பாண்டு மட்டும் 24,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8% இழப்பு ஏற்பட்டுள்ளதாக நடத்திய ஒரு ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்தது.
டெல்லியில் காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையாக, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “யுத் பிரதுஷன் கே விருத்” என்ற காற்று மாசு எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த பிரச்சாரம் மூலம் டில்லி நகரில் காற்று மாசுக்கு எதிராக சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் டெல்லியில் காற்று மாசை குறைக்கும் மற்றொரு நடவடிக்கையாக, அம்மாநிலத்தில் வரும் 15 ஆம் தேதி முதல் அனைத்து வகையான டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதித்தது. மேலும், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற நேரங்களில் டீசல் ஜெனரேட்டர்கள் தடைசெய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…