மதுபானம் அருந்துவோருக்கான வயது வரம்பை 21-ஆக குறைத்த டெல்லி அரசு…!
மது அருந்துவதற்கான அதிகாரப்பூர்வ வயது வரம்பை 25-ல் இருந்து 21-ஆக குறைத்த டெல்லி அரசு.
இந்தியாவை பொறுத்தவரையில் பெரியவர்கள், சிறியவர்கள் என்று பாராமல் மதுபானத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதனால் அவர்களது குடும்பங்கள் தான் சீரழிவை சந்திக்கின்றனர். இந்நிலையில் டெல்லி அரசு நேற்று புதிய கலால் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது.
இதனை தொடர்ந்து டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா அவர்கள் கூறுகையில், டெல்லியில் 60% மதுபான கடைகள் அரசால் நடத்தப்பட்டு வருவதாகவும், புதிதாக மதுபான கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மது அருந்துவதற்கான அதிகாரப்பூர்வ வயது வரம்பை 25-ல் இருந்து 21-ஆக டெல்லி அரசு குறைத்துள்ளதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார்.