டெல்லி அரசு மருத்துவமனைகளில் வெளிமாநில நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்- துணை நிலை ஆளுநர் உத்தரவு!

டெல்லி அரசு மருத்துவமனையில் வெளிமாநில நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்க கூடாது என டெல்லி துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி அரசு மருத்துவமனைகளில் வெளிமாநில நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என டெல்லி மாநில துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார். மேலும், நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.