டெல்லி:இன்று முதல் (இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை) இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,நாடு முழுவதும் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளதாகவும்,ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 130 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தகவல் தெரிவித்தது.
இதற்கிடையில்,அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக அனைத்து மாநில அரசுகளுக்கும் இரவு நேர ஊரடங்கு,பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில்,டெல்லியில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு இன்று (டிசம்பர் 27) முதல் இரவு 11.00 மணி முதல் காலை 5.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே, மத்தியப் பிரதேசம்,உத்தரப்பிரதேசம்,அசாம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…