டெல்லி அரசின் பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடி..! முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட ரேகா குப்தா!

பெண்கள் பாதுகாப்பிற்காக 50000சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என டெல்லியில் பட்ஜெட் தாக்கல் செய்த முதலமைச்சரும் நிதியமைச்சருமான ரேகா குப்தா தெரிவித்திருக்கிறார்.

RekhaGupta

டெல்லி : மாநிலத்தில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 25 அன்று முதலமைச்சரும் நிதியமைச்சருமான ரேகா குப்தா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது பாஜக அரசு 26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் தாக்கல் செய்த முதல் பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு ரூ.28,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது அதே சமயம் பெண்கள் நலனுக்காக ரூ.5,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பேசிய ரேகா குப்தா ” இது ஒரு சாதாரண பட்ஜெட் அல்ல. டெல்லி மற்றும் முழு நாடும் இதைப் பார்க்கிறது. அவர்கள் அனைவரும் புதிய அரசாங்கத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர் 2025-26 நிதியாண்டில் டெல்லிக்காக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இந்த தொகை இதற்கு முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கம் ஒதுக்கீடு செய்திருந்ததை  விட 31.5 சதவீதம் அதிகமாகும் ” என தெரிவித்தார். அதனை தொடர்ந்து பெண்களுக்கு மற்றும் நீர், யமுனா சுத்தம் செய்ய எவ்வளவு கோடி  என பட்ஜெட்டில் முக்கியமான விஷயங்களை அறிவித்தார்.

நீர், சாக்கடை & யமுனா சுத்தம்

நீர் விநியோகத்தை வலுப்படுத்தவும், டேங்கர் தொடர்பான ஊழலை முடிவுக்குக் கொண்டுவரவும் டெல்லி ஜல் போர்டுக்கு ரூ.9,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தண்ணீர் டேங்கர்களிலும் கண்காணிப்பதற்காக ஜிபிஎஸ் அமைப்பு பொருத்தப்படும். கூடுதலாக, யமுனையை சுத்தப்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு, 40 பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • பழைய சாக்கடை கால்வாய்களை சீரமைக்க ரூ.250 கோடி
  • ஹரியானா-டெல்லி கால்வாயை பைப்லைனாக மாற்ற ரூ.200 கோடி
  • மழைநீர் சேகரிப்பு திட்டங்களுக்கு 50 கோடி ரூபாய்
  • அவசரகால குடிநீர் திட்டங்களுக்கு ரூ.150 கோடி

நீர் மற்றும் கழிவுநீர் உள்கட்டமைப்பை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற டெல்லி அரசு கூடுதலாக ரூ.2,000 கோடியை மத்திய அரசிடம் கோரும் என்றும் முதல்வர் கூறினார்.

பெண்கள் நலன், சமூக பாதுகாப்பு

  • டெல்லியில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 செலுத்தும் ‘மஹிளா சம்ரிதி யோஜனா’ திட்டத்துக்கு டெல்லி அரசு ரூ.5,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
  • கர்ப்பிணிப் பெண்களின் பராமரிப்புக்காக மேலும் ரூ.210 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஏழைகளுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 100 கோடி
  • நகரம் முழுவதும் 100 ‘அடல் கேன்டீன்’களை அரசாங்கம் தொடங்கும்
  • பெண்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்காக டெல்லியில் 5,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
  • சாலைகள் மற்றும் பாலங்கள்: சாலைகள் மற்றும் பாலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் 950 கோடி ரூபாய் என ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்