டெல்லி சிறுமி வன்கொடுமை – சஸ்பெண்டை அடுத்து அரசு அதிகாரி கைது!

Arrest

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ள அரசு அதிகாரியை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லி மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை துணை இயக்குநர், 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அரசு அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், டெல்லி போலீசாருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. பாலியல் வன்கொடுமை வழக்கில் டெல்லி அரசு அதிகாரியை கைது செய்யாதது ஏன் என்று மகளிர் ஆணையம் கேள்வி எழுப்பியது.

இதனைத்தொடர்ந்து, தனது நண்பரின் 14 வயது மகளை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த அரசு அதிகாரியை இன்று சஸ்பெண்ட் செய்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். துணை இயக்குநர் மீதான வழக்கு குறித்து மாலை 5 மணிக்குள் அறிக்கை அளிக்கவும் தலைமை செயலாளருக்கும் ஆணையிட்டிருந்தார்.

எனவே, டெல்லி அரசு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரை கைது செய்தது காவல்துறை. டெல்லி அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, சிறுமியை டெல்லி அரசு அதிகாரி கடந்த 2000 நவம்பர் முதல் 2021 ஜனவரி வரை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார் என கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆலோசனை வழங்கிய டெல்லி மருத்துவனை மனநல மருத்துவர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்தக் கொடூரம் தெரிவந்துள்ளது. இதன்பின், குற்றம்சாட்டப்பட்டவர், அவரது மனைவி மீது டெல்லி போலீஸார் பல்வேறு வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், பிரேமோதயின் மனைவி, சிறுமியின் கர்ப்பத்தைக் கலைக்க மருந்து கொடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். கடந்த 2000-ஆம் ஆண்டு சிறுமியின் தந்தை இறந்ததைத் தொடர்ந்து, அந்த சிறுமி டெல்லி அரசு அதிகாரி பிரேமோதய் ஹாக்காவின் இல்லத்தில் வசித்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்