டெல்லி விவசாயிகள் போராட்டம் : கிரிக்கெட் வீரர்கள் ட்வீட்…!

Default Image

கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில்டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து ட்விட் செய்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன.  இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பலகட்ட பேச்சுவார்த்தைகள் விவசாயிகளோடு மத்திய அரசு நடத்தியும், எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில், பெரிய அளவில் சர்ச்சை வெடித்தது.

இந்த சர்ச்சை காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மேலும் பல வெளிநாட்டு பிரபலங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தனர்.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் சிகார் தவான் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில், இந்தியர்கள்  அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும். வெளியில் இருந்து வரும் கருத்துக்களால் குழப்பம் அடைய கூடாது என்பதை முன்வைத்து ட்வீட் செய்துள்ள நிலையில், #IndiaAgainstPropaganda, #IndiaTogether  என்ற ஹேஸ்டேக்கையும் பயன்படுத்தி உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
NTK Leader Seeman
NTK Leader Seeman
Afghanistan vs Australia
tamilnadu city in rain
seeman
Seeman - KayalVizhi