#BREAKING : டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு – அமலுக்கு வந்தது விதிகள்
- டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது.
- டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.
இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறுகையில்,டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக 4 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசிக்கப்பட்டது.டெல்லியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.டெல்லியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,46,92,136 தேர்தலுக்காக 13,750 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்படும்.அதன்படி பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்று தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார் .பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் வருகின்ற 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் .வருகின்ற 21-ஆம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஜனவரி 22 -ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலினை மற்றும் ஜனவரி 24 -ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும் என்று அறிவித்துள்ளார்.