70 சட்ட மன்ற உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில், ஆளும், ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக ஆட்சி செய்து வந்தார். இந்நிலையில், இவரது பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. ஆம் ஆத்மி கட்சியின், ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் டெல்லிக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், பஜக, ஆளும் ஆம்ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இதற்க்கான பிரச்சாரம் இனிதே நிறைவடைந்த நிலையில் இன்று பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக ,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகிறது.ஆம் ஆத்மி மொத்தமுள்ள உள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
பாஜக 67 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. டெல்லியில் தேர்தலுக்காக 13,750 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 1,46,92,136 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதனால் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு சரியாக இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…