106கிலோ எடையுள்ள பெண்ணின் வயிற்றிலிருந்து 50 கிலோ கட்டியை அகற்றிய டெல்லி மருத்துவர்கள்.!

Default Image

106 கிலோ எடையுள்ள பெண்ணின் வயிற்றில் இருந்து 50 கிலோ எடையுள்ள கட்டியை மூன்று மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பின்னர் அகற்றியுள்ளனர்.

டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் 52வயதான பெண்ணின் வயிற்றில் இருந்து 50 கிலோ எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். கடந்த சில மாதங்களாக 106 கிலோ எடையாக இருந்த அந்த பெண்ணிற்கு கடுமையான வயிற்றுவலி, உடல்எடை அதிகரிப்பு, சுவாசக்கோளாறு மற்றும் நடக்கவும், தூங்கவும் இயலாமல் அவதிப்பட, அப்போலோ மருத்துவமனையில் சோதித்து பார்த்த போது அவரது கருப்பையில் கட்டி ஒன்று வளர்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை ஆகஸ்ட் 18 அன்று டாக்டர் அருண்பிரசாத் தலைமையில் நடைபெற்றது. மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு அப்பெண்ணின் வயிற்றிலிருந்து 50 கிலோ எடையுள்ள கருப்பை கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இதுகுறித்து அருண்பிரசாத் கூறுகையில், 50கிலோ எடையுள்ள கட்டியை அகற்றுவது எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது என்றும், அவருக்கு ஹூமோகுளோபின் அளவு குறைந்து இருந்ததால் ஆபரேஷனுக்கு முன்னும், பின்னும் 6 யூனிட் இரத்தம் செலுத்தப்பட்டது. பாரம்பரிய முறைப்படி நடந்த இந்த அறுவைசிகிச்சைக்கு பின் அப்பெண்ணில் உடல்எடை 56 கிலோவாக குறைந்துள்ளது என்றும், கட்டி வளர்ந்து விட்டால் மற்ற உறுப்புகளை செயலிழக்கச் செய்யும் அபாயம் இருந்ததால் விரைவில் ஆபிரேஷன் நடத்த பரிந்துரைக்கப்பட்டது என்றும், உடலில் எந்த பிரச்சனையும் இல்லாததால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்த முடிந்தது என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்