டெல்லி துணை முதல்வர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.!
டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசொடியா கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர்-14 ஆம் தேதி கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசொடியாவுக்கு டெங்கு பாதிப்பும் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்து நிலையில், இன்று அவர் மேக்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது, அவருக்கு ஒரு வாரம் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ளமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக டெல்லி துணை முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.