உன்னாவ்  பாலியல் வழக்கு ! முன்னாள் பாஜக எம்எல்ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை

Published by
Venu

உன்னாவ் பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருக்கு  நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் குல்தீப் சிங்கும், அவரது கூட்டாளிகளிலும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பாக புகார் அளிக்க சென்ற அந்த பெண்ணின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்த போது உயிரிழந்தார்.சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண், அவரது வழக்கறிஞர், அவரது தாய்,  உறவினர் பெண் ஆகியோர் சென்றபோது திடீரென லாரி மோதி அந்த பெண்ணின் தாயும், உறவின பெண்ணும் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண்  மற்றும் வழக்கறிஞர் உயிர்தப்பினார்கள். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கு இடையில் பாஜகவில் இருந்து குல்தீப் சிங் நீக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க  உத்தரவு பிறப்பித்தது. உன்னாவ் பாலியல் வழக்குகள் அனைத்தும் உ.பி.யில் இருந்து டெல்லி  நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு ,சிபிஐ விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது.அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து  டெல்லி நீதிமன்றம் விசாரணை நடத்தியது.அதில்,பாலியல் வழக்கில் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார்  குற்றவாளி என்று நீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது.குல்தீப்புக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இந்நிலையில் உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.இந்த வழக்கில், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் செங்காருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

 

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago