கடந்த 2007-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டிலிருந்து ரூ.305 கோடி முதலீடு வருவதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் வரும் அந்நிய முதலீட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் உதவினார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இதை சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தியது.
அதன்பின் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரம், சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தரப்புக்கு குற்றப்பத்திரிகையுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஒப்படைக்குமாறு டெல்லி நீதிமன்றம் நீதிபதி அஜய் குமார் குஹர் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…
தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு…
சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…