ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் ஆவணங்களை ஒப்படைக்க டெல்லி நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவு.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தரப்புக்கு குற்றப்பத்திரிகையுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஒப்படைக்குமாறு டெல்லி நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது.
கடந்த 2007-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டிலிருந்து ரூ.305 கோடி முதலீடு வருவதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் வரும் அந்நிய முதலீட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் உதவினார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இதை சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தியது.
அதன்பின் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரம், சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தரப்புக்கு குற்றப்பத்திரிகையுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஒப்படைக்குமாறு டெல்லி நீதிமன்றம் நீதிபதி அஜய் குமார் குஹர் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அதிமுகவில் உட்கட்சி பூசல்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் இபிஎஸ்! முன்னாள் அமைச்சர் பேச்சு..,
February 13, 2025![Edappadi Palanisamy - RB Udhayakumar - Seengottaiyan](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Edappadi-Palanisamy-RB-Udhayakumar-Seengottaiyan.webp)
முடிவுக்கு வரும் ரஷ்யா -உக்ரைன் போர்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்..!
February 13, 2025![russia ukraine war Donald Trump](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/russia-ukraine-war-Donald-Trump.webp)
அமெரிக்கா வந்துவிட்டேன்., சில்லென வரவேற்ப்பு., வெள்ளை மாளிகையில் சந்திப்பு! பிரதமரின் அடுத்தடுத்த அப்டேட்!
February 13, 2025![PM Modi USA Visit](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/PM-Modi-USA-Visit.webp)
மீண்டும் மீண்டுமா? தங்கம் விலை உயர்வு..அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
February 13, 2025![gold price](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/gold-price-1-1.webp)