திகார் சிறையில் இருக்கும் டெல்லி முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்… கடும் நிபந்தனைகளுடன் உத்தரவிட்ட நீதிமன்றம்.!
கடும் நிபந்தனைகளுடன் சத்யேந்திர ஜெயினுக்கு 6 வார காலம் ஜாமீன் வழங்கியுள்ளது டெல்லி நீதிமன்றம்.
சட்டவிரோத பணபரிவர்தனையில் ஈடுபட்டதாக கூறி, கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் இருக்கும் டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சத்யேந்திர ஜெயினுக்கு 6 வார காலம் கடும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.
சத்யேந்திர ஜெய்ன் திகார் சிறையில் வருவதற்கு முன்னர் இருந்த எடையை விட அதிகமாக குறைந்துவிட்டார் என்றும் உடல் நிலை அதிகமாக பாதிக்கப்பட்டது என்றும் இரண்டு நாள் முன்னர் கூட கழிவறையிலி விழுந்துவிட்டார் என பல்வேறு மருத்துவ காரணங்களை கூறி டெல்லி நீதிமன்றத்தில் சத்யேந்திர ஜெய்ன் தரப்பு ஜாமீன்கோரியிருந்தது .
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, கோடைகால சிறப்பு அமர்வு நீதிபதிகள் கடும் நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்கினர். டெல்லியை விட்டு வெளியே செல்ல கூடாது சாட்சியங்களை சந்திக்க கூடாது. சாட்சியங்களை கலைக்க கூடாது. ஊடகங்களை சந்திக்க கூடாது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் சிகிச்சை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து சத்யேந்திர ஜெய்னுக்கு 6 வார காலத்திற்கு ஜாமீன் வழங்ப்பட்டுள்ளது.