டெல்லியில் மகளிர் ஆணைய தலைவிக்கே இந்த நிலைமையா.? 47 வயது நபர் உடனடி கைது.!
டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி நள்ளிரவில் டெல்லி சாலையில் நடந்து சென்றபோது, கார் ஓட்டுநர் ஒருவர் அவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.
டெல்லியில் அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வன்முறை சம்பவங்கங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. நாட்டின் தலைநகரில் இவ்வாறு நடப்பது வேதனைக்குரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து, இரவு நேரத்தில் டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி நள்ளிரவில் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அதிகாலை 3 மணிக்கு அவர் சாலையில் நடந்து சென்றபோது, கார் ஓட்டுநர் ஒருவர் சுவாதியிடம் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.
இதனை அடுத்து, ஸ்வாதி அளித்த புகாரின் அடிப்படையில் ஹரிஷ் எனும் 47வயது நபர் கைது செய்யப்பட்டார். மகளிர் ஆணைய தலைவிக்கே பாதுகாப்பில்லாத சூழல் தலைநகரில் ஏற்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.