வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி – ஹரியானா இடையிலான சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்தார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 32 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.
இதுதொடர்பாக மத்திய அரசு 5 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தியது. ஆனால் அவை பலனலிக்கவில்லை. வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை இந்த போராட்டம் தொடருவதாக விவசாயிகள் அமைப்பு தெரிவித்து வருகின்றது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி – ஹரியானா இடையிலான சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகளை இன்று மாலை 6 மணிக்கு சந்திக்கவுள்ளதாக தெரிவித்த நிலையில், முதல்வர், சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்தார். அதன்பின் விவசாயிகளுக்கு உணவு மற்றும் சுகாதார ஏற்பாடுகளை செய்துள்ள இடத்தை பார்வையிடவுள்ளார். மேலும், வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக 6 ஆம் முறையாக மத்திய அரசுடன் வரும் 29 ஆம் தேதி டெல்லியில் போராடும் விவசாய அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது, குறிப்பிடத்தக்கது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…