தொடரும் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை.. பிரதமருக்கு டெல்லி முதல்வர் கடிதம்!
டெல்லியில் உடனடியாக ஆக்சிகன் வசதியும், படுக்கை வசதியை செய்துதருமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 24,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறைவாக உள்ளதாக அம்மாநில முதல்வர் கூறினார். மேலும், டெல்லியில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லியில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்ந்து நிழுவிவரும் நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், உடனடியாக ஆக்சிகன் வசதியும், படுக்கை வசதியை செய்துதருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.