Categories: இந்தியா

டெல்லி முதல்வருக்கு அபராதம்! மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் தேவையில்லை – குஜராத் உயர்நீதிமன்றம்

Published by
பாலா கலியமூர்த்தி

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை வெளியிட கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம்.

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை, பிரதமர் அலுவலகம் வழங்க தேவையில்லை என கூறி இதுகுறித்து வழக்கு தொடர்ந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்தது குஜராத் உயர்நீதிமன்றம்.

டெல்லி முதல்வருக்கு அபராதம்:

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு குறித்த விவரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவு பிறப்பித்த உத்தரவை அந்த மாநில உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. இந்த விவரங்களைக் கேட்டதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்தது.

கெஜ்ரிவால் ட்வீட்:

இந்த அபராத தொகையை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் 4 வாரங்களுக்குள் குஜராத் மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மற்றும் அபராதம் குறித்து கெஜ்ரிவால் ட்விட்டர் பதிவில், தங்கள் பிரதமர் எவ்வளவு படித்தவர் என்பதை அறிய நாட்டிற்கு உரிமை இல்லையா? நீதிமன்றத்தில் அவரது பட்டத்தை வெளிப்படுத்த அவர்கள் கடுமையாக எதிர்த்ததாக கூறியுள்ளார்.

மத்திய தகவல் ஆணையம்:

மேலும் பட்டம் வெளியிட சொன்னவருக்கு அபராதம் விதிக்கப்படுமா? என்ன நடக்கிறது? படிக்காத அல்லது குறைவான கல்வியறிவு கொண்ட பிரதமர் நாட்டுக்கு ஆபத்தானவர் எனவே தெரிவித்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டில், தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) கோரிக்கைக்கு பதிலளித்த மத்திய தகவல் ஆணையம், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டங்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ), குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு:

இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பிரதமர் மோடியின் தேர்தல் ஆவணங்களில், குஜராத் பல்கலைக்கழகத்தில் 1978-இல் பட்டம் பெற்றதாகவும், 1983-இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாகவும் கூறுகின்றன. கடந்த மாதம், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா விசாரணையின் போது, இந்தத் தகவலை வெளியிடுமாறு பல்கலைக்கழகத்தை நிர்ப்பந்திக்கக் கூடாது என்று வாதிட்டார்.

சொலிசிட்டர் ஜெனரல் வாதம்:

ஜனநாயகத்தில், பதவியில் இருப்பவர் முனைவர் பட்டம் பெற்றவராகவோ அல்லது படிப்பறிவில்லாதவராகவோ இருந்தால் வித்தியாசம் இருக்காது. மேலும், இந்த விவகாரத்தில் பொதுமக்கள் நலன் எதுவும் இல்லை. யாரோ ஒருவரின் குழந்தைத்தனமான மற்றும் பொறுப்பற்ற ஆர்வத்தைத் திருப்திப்படுத்த தகவலை வழங்குமாறு எங்களைக் கேட்க முடியாது என்றார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்படும் தகவல்கள் பொதுச் செயல்பாடுகளுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.

உத்தரவு ரத்து:

இந்த நிலையில், பட்டப்படிப்பு சான்றிதழைகளை பிரதமர் அலுவலகம் அளிக்க வேண்டும் என தலைமை தகவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதி, சான்றிதழ்களை வெளியிட கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

8 minutes ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

2 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

2 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

3 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

4 hours ago

“18 வயதில் ரேஸிங் தொடங்கினேன்…ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன்” அஜித் குமார் அதிரடி அறிவிப்பு!

துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…

4 hours ago