கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மருத்துவமனைகளில் இருந்து ஹோட்டல்களை நீக்க முடிவு – டெல்லி முதல்வர்.!

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் இருந்து ஹோட்டல்களை நீக்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி சார்பில் நகரத்தில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக 40 ஹோட்டல்களை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டது. அந்த வகையில் மருத்துவமனையில் 12,633 படுக்கைகளும், கொரோனா பராமரிப்பு மையங்களில் 4,700-க்கும் மேற்பட்ட கொரோனா படுக்கைகளும் இருந்தது.
தற்போது டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமையன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,887 ஆக குறைந்துள்ளது. அதில் 6,219 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மிதமான அறிகுறிகளுடன் ஹோட்டலில் தங்கியிருக்கும் நோயாளிகளின் நிலைமை மோசமடையும் பட்சத்தில் மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் இருந்து ஹோட்டல்கள் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
ஏனெனில் கடந்த சில நாட்களாக ஹோட்டலில் உள்ள படுக்கைகள் அனைத்து காலியாக உள்ளதாக அவர் ட்வீட்டில் கூறினார். மேலும் கொரோனா சோதனை தொடர்பான வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும் கூறியுள்ளார். அதாவது எந்தவொரு நோயாளியின் ஆன்டிஜென் பரிசோதனை நெகட்டிவாக இருந்து, அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில், அவர்கள் மீது RT-PCR சோதனை செய்யப்பட வேண்டும் என்ற விதியை பின்பற்றுமாறு வலியுறுத்தி உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025