விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அரவிந்த் கெஜ்ரிவால் ஒருநாள் உண்ணாவிரதம்
விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண்துறை தனியார் வசம் மாறிவிடும் என விவசாயிகள் தெரிவித்து இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் .
இதனிடையே இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்த நிலையில் உண்ணா விரதம் இருந்து வருகின்றனர் .விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் , உண்ணாவிரதம் புனிதமானது. நீங்கள் எங்கிருந்தாலும், விவசாய சகோதரர்களுக்காக விரதம் இருங்கள். அவர்களின் போராட்டத்தின் வெற்றிக்காக கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள். இறுதியில், விவசாயிகள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
उपवास पवित्र होता है। आप जहां हैं, वहीं हमारे किसान भाइयों के लिए उपवास कीजिए। प्रभु से उनके संघर्ष की सफलता की प्रार्थना कीजिए। अंत में किसानों की अवश्य जीत होगी।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 14, 2020