சிஏஏ சட்டம் இந்திய நாட்டுக்கு ஆபத்தானது… அரவிந்த் கெஜ்ரிவால் கடும் குற்றச்சாட்டு!
CAA : நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள், போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த 2019ம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்தது மட்டுமில்லாமல், இந்திய குடியுரிமை பெற புதிய இணையத்தளமும் அறிமுகமானது.
Read More – குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன? இச்சட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது ஏன்? விரிவான தகவல்
சிஏஏ அமல்படுத்துவப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து போராட்டங்களில் இறங்கியுள்ளனர். மதசார்பற்ற நாடாக இருக்கும் இந்தியாவை மத ரீதியில் பிளவுபடுத்த மத்திய பாஜக அரசு இவ்வாறு செய்கிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிஏஏ சட்டம் இந்திய நாட்டுக்கு ஆபத்தானது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காணொளி வாயிலாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இது என்ன CAA? வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்திய குடியுரிமை பெற விரும்பினால், அவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என மத்தியில் உள்ள பாஜக அரசு கூறுகிறது.
Read More – குடியுரிமை பெற புதிய இணையதளம்… அறிமுகம் செய்தது மத்திய அரசு!
சிறுபான்மையினர் பெருமளவில் நம் நாட்டிற்கு கொண்டு வரப்படுவார்கள் என்று தான் அர்த்தம். அவர்களுக்கு வேலை வழங்குவதுடன், வீடுகளும் கட்டித் தரப்படும். பாஜகவால் நமது குழந்தைகளுக்கு வேலை வழங்க முடியாது. ஆனால், பாகிஸ்தானில் இருந்து வருபவர்களுக்கு வேலை கொடுக்க நினைக்கிறார்கள். எங்கள் மக்களில் பலர் வீடற்றவர்கள், ஆனால், பாகிஸ்தானில் இருந்து மக்களை இங்கு குடியேற்ற பாஜக விரும்புகிறது என குற்றச்சாட்டினார்..
இதனால், நமது குடும்பங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டிய இந்திய அரசின் பணம் பாகிஸ்தானியர்களின் குடியேற்றத்திற்கு பயன்படுத்தப்படும். எனவே, சிஏஏ சட்டம் இந்திய நாட்டுக்கு ஆபத்தானது என தெரிவித்துள்ளார். CAA குறித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிக்கை குறித்து பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது, இது எந்தவொரு இந்தியரின் குடியுரிமையையும் பறிக்கவில்லை.
Read More – பள்ளிகளுக்கு விடுமுறை.? வாகனங்களை பிடுங்கும் திமுக.? அண்ணாமலை காட்டம்.!
இந்த சட்டம் நம்பிக்கையின் அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே குடியுரிமை அளிக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் , இந்திய குடிமக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, CAA என்ற பெயரில் வகுப்புவாத பதற்றத்தை பரப்ப முயற்சிப்பவர்கள் நிறுத்த வேண்டும், சிஏஏ குறித்து பொய் சொல்வதை நிறுத்துங்கள். குறிப்பாக தென்னிந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள் வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளார்.