ரயில்வே பயணத்தில் முதியோருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை நிறுத்த வேண்டாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய ரயில்வேயில் 60 வயது மற்றும் அதற்கு மேலே உள்ள ஆண்கள் டிக்கெட் விலையில் 40 சதவீத சலுகையும், 58 வயது மற்றும் அதற்கு மேலே உள்ள பெண்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீத சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த சலுகையை நிறுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது. இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
சிறிய தொகை :
அந்த கடிதத்தில் ரயில்வேயில் முதியோர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்துவதன் மூலம் மத்திய அரசு பணக்காரர்களாக மரபோவதோ அல்லது முதியோருக்காக செலவழிப்பதால் ஏழையாகவோ மாறப்போவது கிடையாது. மொத்த பட்ஜெட் 45 லட்சம் கோடியில் இந்த சலுகைக்கு செலவிடப்படும் தொகையானது வெறும் 1600 கோடி ரூபாய் மட்டுமே ஆகும். இது சிறிய தொகை மட்டுமே எனக் குறிப்பிட்டு இருந்தார்.
கெஜ்ரிவால் கோரிக்கை :
இந்த ரயில்வே சலுகை மூலம் கோடிக்கணக்கான முதியவர்கள் பயன்பெற்று வந்தனர். இந்த சலுகையை நிறுத்த வேண்டாம் தொடர்ந்து இதனை செயல்படுத்துங்கள் என்னும் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…