ரயில் பயண சலுகைகளை நிறுத்த வேண்டாம்.! பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்.!

Default Image

ரயில்வே பயணத்தில் முதியோருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை நிறுத்த வேண்டாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய ரயில்வேயில் 60 வயது மற்றும் அதற்கு மேலே உள்ள ஆண்கள் டிக்கெட் விலையில் 40 சதவீத சலுகையும், 58 வயது மற்றும் அதற்கு மேலே உள்ள பெண்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீத சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த சலுகையை நிறுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது. இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

சிறிய தொகை :

அந்த கடிதத்தில் ரயில்வேயில் முதியோர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்துவதன் மூலம் மத்திய அரசு பணக்காரர்களாக மரபோவதோ அல்லது முதியோருக்காக செலவழிப்பதால் ஏழையாகவோ மாறப்போவது கிடையாது. மொத்த பட்ஜெட் 45 லட்சம் கோடியில் இந்த சலுகைக்கு செலவிடப்படும் தொகையானது வெறும்  1600 கோடி ரூபாய் மட்டுமே ஆகும். இது சிறிய தொகை மட்டுமே எனக் குறிப்பிட்டு இருந்தார்.

கெஜ்ரிவால் கோரிக்கை :

இந்த ரயில்வே சலுகை மூலம் கோடிக்கணக்கான முதியவர்கள் பயன்பெற்று வந்தனர். இந்த சலுகையை நிறுத்த வேண்டாம் தொடர்ந்து இதனை செயல்படுத்துங்கள் என்னும் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்