டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். கடந்த முறை 2020ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றி உள்ளது. பாஜக 8 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. பெரும்பான்மைக்கு 36 எம்எல்ஏக்களை பெற்று இருக்க வேண்டும்.
இந்நிலையில் முன்னதாக, ஆளும் ஆம் ஆத்மி அரசு டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் செய்ததாகவும், அதன் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர்கள் சத்யேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது வரையில் அமலாக்கத்துறை விசாரணையில் உள்ளனர்.
I.N.D.I.A கூட்டணி… நிதிஷ் குமார் பிரதமராக வாய்ப்பு இருக்கிறது.! அகிலேஷ் யாதவ் கருத்து.!
அடுத்ததாக இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், சமீபத்தில் அவர்கள் (பாஜக) எங்கள் 7 டெல்லி எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு, சில நாட்களில் கெஜ்ரிவாலை கைது செய்வோம். அதன் பிறகு எம்எல்ஏக்களுடன் பேசுவரத்தை நடத்துவோம். தற்போது 21 எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மற்றவர்களிடமும் பேசுவோம். அதன் பிறகு டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்ப்போம்.
அதனால் , தற்போதே நீங்கள் எங்களுடன் (பாஜக) வரலாம். தற்போது உங்களுக்கு 25 கோடி ரூபாய் கொடுப்போம். ஆளும் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்போம் என கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் 21 எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டதாக கூறினாலும், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி இதுவரை 7 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் அனைவரும் மறுத்துவிட்டனர்.
அதாவது, பாஜக அரசு மதுபான ஊழலை விசாரிக்க என்னை அழைக்கவில்லை. என்னை கைது செய்து, டெல்லியில் ஆம் ஆத்மி அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்கிறார்கள். கடந்த ஒன்பது ஆண்டுகளில், எங்கள் அரசைக் கவிழ்க்க அவர்கள் பல சதிகளை செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. கடவுளும் மக்களும் எப்போதும் எங்களை ஆதரித்தனர். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வலுவாக ஒன்றாக உள்ளனர்.
டெல்லி மக்களுக்காக நமது அரசு எவ்வளவு நலத்திட்டங்களை செய்துள்ளது என்பது இவர்களுக்கு தெரியும். அவர்கள் உருவாக்கிய தடைகளை தாண்டி நாங்கள் எவ்வளவோ சாதித்துள்ளோம். டெல்லி மக்கள் “ஆம் ஆத்மியை” பெரிதும் நேசிக்கின்றனர். எனவே, தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிப்பது அவர்களின் அதிகாரத்தில் இல்லை. எனவே போலி மதுபான ஊழல் என்ற குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்து அரசை கவிழ்க்க நினைக்கிறார்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…