டெல்லி, பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி ஒட்டு மொத்த வட இந்தியாவும் காற்று மாசுவால் தத்தளித்து வருகிறது. ஆதலால் இது குறித்து குறை கூறுவதை தவிர்த்து அதற்கான தீர்வினை கண்டறிய வேண்டும். – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. அதுவும் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் காற்றின் தரக்குறியீட்டு எண் 472ஆக பதிவாகி இருந்தது. அது மிகவு மோசம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. காற்றில் நச்சு விளைவிக்கும் மாசு இருப்பதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் குழந்தைகள் முதியவர்கள், நோய் வாய்ப்பட்டுள்ளவர்கள் வெளியே வர வேண்டாம் எனவும், மற்றவர்கள் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டாம். எனவும் அறிவுறுத்தினர்.
மேலும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் வேலை செய்யவும், மற்றவர்களை வீட்டிலிருந்து தங்கள் வேலைகளை பார்க்க ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், 5ஆம் வகுப்பு வரையில் பயிலும் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில்,’ டெல்லி, பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி ஒட்டு மொத்த வட இந்தியாவும் காற்று மாசுவால் தத்தளித்து வருகிறது. ஆதலால் இது குறித்து குறை கூறுவதை தவிர்த்து அதற்கான தீர்வினை கண்டறிய வேண்டும். எனவும், அடுத்த ஆண்டுக்குள் பஞ்சாப் மாநிலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் எனவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…