டெல்லி மட்டுமல்ல மொத்த வட இந்தியாவும் காற்று மாசுவால் தவித்து வருகிறது.! கெஜ்ரிவால் விளக்கம்.!

Default Image

டெல்லி, பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி ஒட்டு மொத்த வட இந்தியாவும் காற்று மாசுவால் தத்தளித்து வருகிறது. ஆதலால் இது குறித்து குறை கூறுவதை தவிர்த்து அதற்கான தீர்வினை கண்டறிய வேண்டும். – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. அதுவும் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் காற்றின் தரக்குறியீட்டு எண் 472ஆக பதிவாகி இருந்தது. அது மிகவு மோசம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. காற்றில் நச்சு விளைவிக்கும் மாசு இருப்பதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் குழந்தைகள் முதியவர்கள், நோய் வாய்ப்பட்டுள்ளவர்கள் வெளியே வர வேண்டாம் எனவும், மற்றவர்கள் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டாம். எனவும் அறிவுறுத்தினர்.

மேலும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் வேலை செய்யவும், மற்றவர்களை வீட்டிலிருந்து தங்கள் வேலைகளை பார்க்க ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், 5ஆம் வகுப்பு வரையில் பயிலும் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்,’ டெல்லி, பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி ஒட்டு மொத்த வட இந்தியாவும் காற்று மாசுவால் தத்தளித்து வருகிறது. ஆதலால் இது குறித்து குறை கூறுவதை தவிர்த்து அதற்கான தீர்வினை கண்டறிய வேண்டும். எனவும், அடுத்த ஆண்டுக்குள் பஞ்சாப் மாநிலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் எனவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்