சீனாவிலிருந்து டெல்லிக்கு 6000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி – கெஜ்ரிவால்

கொரோனா 3 வது அலையை சமாளிக்க டெல்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6000 சிலிண்டர்கள் இறக்குமதி.
டெல்லியில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக உச்சத்தை எட்டிவந்த நிலையில், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் டெல்லி அரசின் பல்வேறு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளினால் தற்போது அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இன்று மட்டும் 1,550 ஆக புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது,207 பேர் உயிரிழந்துள்ளனர்.இது மார்ச் மாதத்திற்கு பிறகு ஏற்பட்ட குறைந்த பாதிப்பு எண்ணிக்கை என டெல்லி அரசு தெரிவித்தள்ளது.
இதனையடுத்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் இன்று டெல்லியின் மாயாபுரி பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலைக்கு சென்ற போது சீனாவிடமிருந்து 6,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ததுள்ளதாக தெரிவித்தார். இது கொரோனா 3 வது அலையின் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த சிலிண்டர்களை எச்.சி.எல் நன்கொடையாக வழங்கியதாகவும், இந்த சிலிண்டர்களை இறக்குமதி செய்ய உதவிய வெளியுறவு அமைச்சகத்திற்கும் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் தனது நன்றியை தெறிவித்துள்ளார்.
மேலும் இந்த 6000 ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்தி கூடுதலாக 3000 புதிய ஆக்ஸிஜன் படுக்கைகளை உருவாக்க முடியும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025