கடந்த 2021 டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தது. அதன் பிறகு இந்த மதுபான கொள்கை விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்தனர்.
அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது வரை விசாரணைக்காக டெல்லி சிறையில் அவர் உள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆனால் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
டெல்லி அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.!
இதற்கிடையில் மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் அண்மையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இதனை தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை கடந்த திங்கள் கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது.
அந்த சம்மன் அடிப்படையில் இன்று (நவம்பர் 2) காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அரவிந்த் கெஜிரிவால் நேரில் ஆஜராக உள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளதால் , அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…