நாடு நலம் பெற 7 மணிநேர தியானம்.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரார்த்தனை.!
நாடு நலம் பெற வேண்டும் என 7 மணிநேர தியானத்தை தொடங்கினர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
இன்று காலை 10 மணிக்கு, டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திவிட்டு, பின்னர், தனது தியானத்தை தொடங்கினார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த தியானமானது நாடு நலம் பெற வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொள்வதாகவும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கெஜ்ரிவால் தியானத்தில் இருப்பார் எனவும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
கெஜ்ரிவால் கவலை :
தியானம் மேற்கொள்வதற்கு முன்னர் நேற்று அவர் கூறும் போது, நாட்டிற்காக நல்ல வேலைகளை செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்றும், அதே சமயம் நாட்டைக் கொள்ளையடிப்பவர்கள் கைதில் இருந்து தப்பிக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பு :
டிஜிட்டல் வாயிலாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், ‘அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மோசமான நிலையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த அரசு பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் மேம்படுத்திய இரண்டு பேர் மனீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் சிறையில் உள்ளனர்.’ என்று கெஜ்ரிவால் கூறினார்.
கெஜ்ரிவால் வேண்டுகோள் :
மேலும், ‘நல்ல கல்வி மற்றும் நல்ல சுகாதார வசதிகளை வழங்குபவர்களை சிறையில் அடைக்கும் பிரதமர் மோடி, நாட்டை கொள்ளையடிப்பவர்களை ஆதரிப்பது தான் கவலை அளிக்கிறது.’ எனவும், ஹோலி கொண்டாடிய பிறகு, தயவு செய்து நாட்டிற்காக பிரார்த்தனை செய்ய நேரம் ஒதுக்குங்கள்.’ என்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.